
பல்லாவரத்தில் போக்குவரத்து காவலர்கள் சார்பில் 37 வது சாலை பாதுகாப்பு வாரம், எமதர்மன் ராஜா வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,
சென்னை அடுத்த பல்லாவரம் சிக்னல் அருகே தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் பல்லாவரம் T3 போக்குவரத்து சரகம் சார்பில் போக்குவரத்து காவலர்கள் சார்பில் நடத்தும் 2024 ஆண்டிற்க்கான 37 வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி ஆணையாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமதர்ம ராஜா வேடமிட்டு வந்த ஒருவர் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவர்களிடம் சிக்னலை மதித்து நடக்க வேண்டும், தலைகவசம் அணியாமல் செல்ல கூடாது, பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் போது வாகனத்தை கவனத்துடன் செலுத்த வேண்டும் எனவும் இல்லையேல் எமது லோகத்திற்கு அழைத்து சென்று விடுவேன என வாகன ஓட்டிகளுகு விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைகவசம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலதுறையுடன், மறைமலை அடிகளார் பள்ளி மாணவர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்றர். இதில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜி.கே.மணவாளன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சசிகுமார், சுதாகர், அய்யனார், அசோக்குமார், அருண்குமார், கெளதம், மகளிரணி பெண் காவலர் சுமித்ரா உட்பட் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.


