Indian Student In US: இந்திய மாணவர் சடலமாக மீட்ப்பு!

அமெரிக்காவிலுள்ள இண்டியான மாகணத்தில் மாயமான இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சடலமாக இந்திய மாணவர்மீட்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியான மாகணத்திலுள்ள ‘John Martinson Honors College of Purdue University’-யில் கணினி அறிவியலில் பட்டம் படித்துவரும் நீல் ஆச்சார்யா (Neel Acharya) என்ற மாணவர் கடந்த ஞாயிறுக்கிழமை முதல் காணவில்லை என அவருடைய தாய் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உதவி கோரியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக காவல் துறையின தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொது  Purdue பல்கலைக்கழக்த்தின் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் நீல் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சூப்பர்மார்க்கெட்டில் பகுதிநேர பணி செய்துகொண்டிருந்த ஒரு மாணவரை, வீடற்ற நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கி கொலை செய்தார். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து நீல் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீல் ஆச்சார்யா மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *