
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலகத்தை 5000த்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி நகராட்சியுடன் நகராட்சி ஒட்டி உள்ள கிராமங்களான ஆண்டிகுளம்., குருப்பநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுநாசுவம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளை இணைப்பதாக கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,,
இந்த தீர்மானத்திற்கு மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி சேர்ந்த கிராம மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில்., பவானி தாலுக்கா அதற்கு உட்பட்ட ஆண்டிகுளம் மற்றும் குர்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக கோரிக்கை மனுக்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்., இந்த நிலையில் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் இன்று இரண்டு ஊராட்சிகளிலும் இருந்து சுமார் 5000 மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பவானி அந்தியூர் பிரிவு சந்திப்பு சாலையில் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலம் ஆக கொண்டு சென்று சேர்த்தனர்.,
தொடர்ந்து வழிநெடுகளும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்., தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற கிராம மக்களை தடுத்து நிறுத்திய போலீசார் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் கேட்டை பூட்டியதால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.,
தொடர்ந்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் வருவதை அறிந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் என யாருமே நகராட்சி அலுவலகத்திற்கு வராததால் நகராட்சி பொறியாளர் இடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகாக கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்..
தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு இருந்த ஐந்து இடத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கடந்த நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் கோஷங்களை முன்வைத்தும் நகராட்சியுடன் கிராமத்தை இணைத்தால் தங்களது குடும்ப சூழல் தலைவராக புரட்டிப் போடப்படும் எனவும் 100 நாள் வேலை பறிபோகும் எனவும் குடிநீர் முதல் குப்பை வரை அனைத்திற்கும் வரி கட்ட வேண்டும் எனவும் கோஷங்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., இதற்கு முன்னதாக காடையாம்பட்டி பகுதியில் இருந்து ஆண்டுவிழா ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஒரே சமயத்தில் ஊர்வலமாக வந்ததால் பவானி அந்தியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி சேர்ந்த மக்கள் குறுப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்ததால் தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை மாற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக வாகனங்களை திருப்பி அனுப்பினார் இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பவானி நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது., தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெறவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்..
மேலும் நகராட்சியில் ஏற்பட்டுள்ள நான்கு கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையை ஈடு ஈடு செய்யும் விதமாக கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.,
அதேபோல நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..

