Advertisements

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய் ஒரு டிஸ்ரப்டர் ஆக அதாவது பிளவு சக்தியாக செயல்படுவார் என்றும் அதனால் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அந்தக் கட்சியின் தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளர் அர்ஜுன மூர்த்தி சொல்லியிருக்கி்றார்.
இது அரசியல் வட்டத்தில் விவாதப் பொருளாகி உள்ளது. இது குறித்த பதிவுதான் இது.
இதுதொடர்பாக அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கார். அதுல அவர் என்ன சொல்றாருன்னா…
2006-ம் ஆண்டில் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு ‘டிஸ்ரப்டர்’ ஆக செயல்படுவார் என்று சொல்லியிருக்காரு.
2006-ம் ஆண்டில் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு ‘டிஸ்ரப்டர்’ ஆக செயல்படுவார் என்று சொல்லியிருக்காரு.
“கடந்த 1977 ம் ஆண்டு முதல் இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், வாக்காளர் எண்ணிக்கை உயர்வுக்கும், வாக்குப்பதிவு சதவீதத்துக்கும் இடையே ஒரு சமநிலையற்ற போக்கு இருப்பதை அறிய முடியும் என்று குறிப்பிட்டிருக்கார்.
1980-ம் ஆண்டில் வாக்காளர் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரித்தபோது, வாக்குப்பதிவு 44 லட்சம் உயர்ந்தது. ஆனால் 1984-ம் ஆண்டு 32 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்ததாகவும் ஆனால் வாக்குப்பதிவு 29 லட்சம் மட்டுமே உயர்ந்ததாகவும் சுட்டிக்காட்டியிருக்கார்.
இதேமாதிரி, 1991-ம் ஆண்டில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தால் 22 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும், வாக்குப்பதிவு 6 லட்சம் குறைந்தது என்றும் அதேநேரம் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்தது என்றும் அர்ஜுன மூர்த்தி நினைவுகூர்ந்திருக்காரு.
30 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்த நிலையில், வாக்குப்பதிவு 58 லட்சம் கூடியது. இதற்கு, விஜயகாந்தின் அரசியலுக்கு வந்ததே முக்கிய காரணம் என கூறும் அவர், தமிழக அரசியலில் விஜயகாந்த் உருவாக்கிய அலை, வாக்குப்பதிவில் பெரும் உயர்வை ஏற்படுத்தியதோடு, ஆட்சி சமன்பாடுகளையும் பாதித்ததாக குறிப்பிடுகிறார்.
அதேபோல, தற்போது நடந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, S.I.R என்கிற சிறப்புத் தீவிர திருத்தங்களுக்கு பிறகு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 73 லட்சமாக இருந்ததை குறிப்பிட்டுள்ள அவர், இது சுமார் 86 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதால், மொத்த வாக்குகள் 4 கோடியே 90 லட்சம் எட்டியுள்ளது. எதிர்பார்த்ததைவிட இந்த உயர்வு அதிகம் என்கிறார்.
இதில் விஜய்யின் பங்கு முக்கியமானது என மறக்காமல் சொல்லும் அர்ஜுனமூர்த்தி, 2006-ம் ஆண்டில் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ம் ஆண்டில் விஜய் ஒரு ‘டிஸ்ரப்டர்’ அதாவது பிளவு ஏற்படுத்துபவராக செயல்படுவார் என திட்டவட்டமாக சொல்லியிருக்கார். .
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 7 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும். 20 முதல் 25 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் சொல்லும் பாஜக அர்ஜுன மூர்த்தி, அதேநேரம், தவெக உருவாக்கும் வாக்குப்பிளவு பல தொகுதிகளில் முடிவுகளை தலைகீழாக மாற்றும் என குறிப்பிடுகிறார்.
தற்போதைய திமுக அரசின் மீதான அதிருப்தி காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சில பகுதிகளில் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும். மேலும், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் திமுக கடும் போட்டியை சந்திக்கக்கூடும் என்றும் சொல்லியிருக்கும் அவர், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கார்.
அதேநேரம் திமுக தனது ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற நலத்திட்டங்கள் மூலம் தனது ஆதரவு வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே, ஆளுங்கட்சி தொடருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதையும் பாஜக அர்ஜுன மூர்த்தி குறிப்பிட்டிருக்கார்.
மொத்தத்தில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியின் புதிய கட்டத்தை தொடங்கக் கூடிய சூழல் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisements



