சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Advertisements

பிஜப்பூர்:

சத்தீஸ்கர்  மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்றுகாலைப் பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள்நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்த ஒருவர் என 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்றனர்.

அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *