பாகிஸ்தான் நெருப்புடன் விளையாடுவதை நிருத்த வேண்டும் என எச்சரிக்கை..!

Advertisements

நெருப்புடன் விளையாடுவதாக பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று தலிபான்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இருநாடுகளிடையேயான சண்டையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை துருக்கி, கத்தார் தலைமையில் நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே வருகின்ற 6 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், அனைவரும் முஸ்லிம் சகோதரர்கள் என்றும் நெருப்புடனும், போருடனும் விளையாடுகிறார்கள் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து தாங்கள் போரை விரும்பவில்லை என்றும் அதே வேளையில் தங்கள் நாட்டை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிப்போம், என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் காபூல் நதியில் உடனடியாக அணை கட்டும் திட்டத்தை தொடங்க ஆப்கான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *