கரூர் பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரூரில் த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கரூருக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை யடுத்து, நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
இதன் பின்னர், வேலுச்சாமிபுரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் சாட்சியங்கள் பெற சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து நான்கு பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
