Trichy:மாப்பிள்ளைக்குத் தாலி கட்டிய மணப்பெண் ..இது என்ன புதுசா இருக்கு..!

Advertisements

மாப்பிள்ளைக்கு, மணப்பெண் மாங்கல்யம் கட்டிய சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் துணை ஆட்சியர் செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதி. திருச்சி, இந்தியன் வங்கி காலனியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மருத்துவர் ஸ்வஐன்யா.

இவரது திருமணம் முகேஷ்குமார் என்பவருடன் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பில் ழங்கால இசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவற்றை வாசிக்கும் முறைகுறித்து அனைவருக்கும் செய்து காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, திருமணத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் மாங்கல்யம் கட்டிய பின்னர், மணமகனின் கையில் மாங்கல்யம் கொண்டு செய்யப்பட்ட கைச்செயினை மணமகள் கட்டினார். மேலும், திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும்,

விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. மரம் நடுதலின் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில், “பனை விதை, மாநில விதை: மாநிலம் முழுவதும் அதை விதை ” என அச்சிடப்பட்ட காகித பையில் அவை கொடுக்கப்பட்டது. தற்போது இந்தத் திருமண நிகழ்வுகள் கவனம் பெற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *