
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளின் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை அதிகரித்துள்ளது. இதனிடையே, சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதலை பாகிஸ்தான் அரசு நிகழ்த்தியுள்ளது.



