
பெங்களூருவில் நடைபெற்ற ஐ.டி.எப் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், தாய்லாந்தின் லான்லனா தரருதீயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, தாய்லாந்தின் லான்லனா தரருதீயுடன் விளையாடினர். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வைஷ்ணவி அத்கர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஹன்னேவுடன் விளையாட உள்ளார்.


