
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் பிப்ரவரி 27ஆம் ஆம் நாள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஊர்மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஊர்த் தலைவர்கள், இளைஞர்கள், அனைத்துச் சமுதாய மக்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் நட்டனர். அதனைத் தொடர்ந்து வாடிவாசல் அமைத்தல், விழா மேடை அமைத்தல் ஆகியவற்றில் விழாக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.




