இருமுனை போருக்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது – கவாஜா ஆசிப்..!

இருமுனை போருக்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும், மேற்கு எல்லையில் தலிபான்களுக்கும் எதிரான இருமுனை போருக்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, முதல் சுற்றில் இறைவன் தங்களுக்கு உதவியது போல், இரண்டாம் சுற்றிலும் உதவுவார்’ என்று குறிப்பிட்டார். இதை யடுத்து, டில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை வெறும் காஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், இந்தியா இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும், இது குறித்து கவாஜாவின் பேச்சு கவனத்தை திசை திருப்பும் தீவிர முயற்சி என இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *