அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!

Advertisements

தமிழக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 55 சதவீத அகவிலைப்படி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இந்த அகவிலைப்படி உயர்வால்,16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,829 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் மதுரம், அகில இந்திய தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘தங்களது சங்க கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் நிதி சுமையினையும் கருதாமல் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள முதல்வருக்கு அரசு ஊழியர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *