சேப்பாக்கத்தில் கிவிஸ் படை சாதனை..!

Advertisements
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை விக்கெட் இழப்பின்றி வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சென்னையின் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவரில் 173 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *