இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி.!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்கள் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தரப்பில் பவுமா தலைமையிலான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து, இரு அணிகளுமே சம பலத்துடன் மோத உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *