பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த 2 பேர் அதிரடி கைது..!

Advertisements

பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர், ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் தீவிரவாதிகளுக்கு இருப்பிடம், உணவு அளித்ததோடு, ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் உதவியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பேருக்கு உதவிய நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *