Advertisements

சமீபகாலமாக தமிழக வெற்றி கழகத்தில் கொடி கட்டி பறந்து வரும் ஆதவ் அர்ஜுனா , உண்மையிலேயே நடிகர் விஜய்யின் விசுவாசி அல்ல அவர் திமுகவால் அனுப்பப்பட்ட ஸ்லீப்பர்செல் என்ற பரபரப்பு தகவலை அவரது மச்சான் வெளியிட்டு இருக்கிறார் . சமீப காலங்களில் புதிய அரசியல் தலைவராக உருவெடுத்து இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.
முதலில் யார் இந்த ஆதவ் அர்ஜுனா என்பதை பார்த்து விடலாம் .திருச்சியை சேர்ந்த இவருக்கு 43 வயது ஆகிறது. மிக சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் . சிறுவயதிலேயே இவரது தாயார் இறந்துவிட்டார். திருச்சி ராமகிருஷ்ண மட பள்ளியில் படித்து வந்த இவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார் .
இதன் பின்னர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகளான டெய்சி மார்ட்டினை திருமணம் செய்தார்.” அரைஸ் கேப்பிட்டல்” என்ற நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சங்க தலைவராகவும் பணியாற்றியவர். இது மட்டுமல்லாமல் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் .
விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் மிக்க ஆதவ் அர்ஜுனா முதன் முதலாக திமுகவின் ஆதரவாளராக களமிறங்கினார் . கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மு க ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தை ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகங்களை திமுகவுக்கு வகுத்துக் கொடுத்தார் .
இதன் பின்னர் கடந்து 2023 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு அந்த கட்சியில் இணைந்தார் . அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டது. இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சி விதிகளை மீறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார் .
இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார் . இந்த நிலையில் தான் நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சியில் இவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டது .
தற்பொழுது நடிகர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கும் ஐந்து பேர் குழுவில் ஆதவ் அர்ஜுனா முக்கிய நபராக இருக்கிறார் . இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தில் ஸ்லீப்பர் செல்லாத செயல்படுகிறார் என்ற பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனை அவரது மச்சானே வெளியிட்டுள்ளார் .
தமிழக வெற்றி கழகத்தை தனித்துப் போட்டியிட வைத்து அதன்மூலம் திமுக வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுப்பதற்காக திமுகவால் தமிழக வெற்றி கழகத்திற்கு அனுப்பப்பட்டவர் தான் ஆதவ் அர்ஜுனா என , அவரது மச்சான் சார்லஸ் மார்ட்டின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் ,
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் மார்ட்டின் ஆதவ் அர்ஜுனா குறித்து சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார் . அவர் கூறும் போது ஆதவன் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்குள் வந்ததும் தொழிலை கைப் பற்ற வேண்டும் என திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். எங்களின் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் இதனால் எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது .
அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய சண்டையை உருவாக்கினார் அவரால் நானும் என் தந்தையும் இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்தோம் . அதன் பின்னர் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தருவதற்காக அந்த கட்சிக்கு போனார். முதலமைச்சர் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரிசனுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் அங்கு மோதலை ஏற்படுத்த முயன்றார் .
சபரீசனுடன் இவருக்கு மிக நெருக்கமான பழக்கம் உண்டு இந்த நிலையில் குடும்பத்திற்குள் பிரச்சினையை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் திமுகவை கையில் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார் .இதனை எல்லாம் அறிந்து கொண்டு மு.க ஸ்டாலின் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர் . இதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சென்றார் . அங்கும் திருமாவளவனை மீறி செயல்பட தொடங்கினார் . அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என நினைத்தார் . இதனை புரிந்து கொண்ட தொல் திருமாவளவன் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் .
தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைந்துள்ளார் அங்கும் ஆதாவ் அர்ஜூனா தன்னையே முன்னிலைப்படுத்தி வருகிறார் . ஆதவ் அர்ஜுனாவையும் ஜான் ஆரோக்கிய சாமியையும் தமிழக வெற்றி கழகத்திற்கு அனுப்பியதே திமுக தான் தமிழக வெற்றி கழகம் எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்காக தான் ஆதவ் அர்ஜுனா அனுப்பப்பட்டு இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் வேறு கூட்டணிக்கு செல்லாமல் இருந்தாலே மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதே திமுகவின் கணக்கு .
எனவே தமிழக வெற்றி கழகத்தில் அவர் ஒரு ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வருகிறார் . தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் விஜய் தனது தந்தை சொல்வதை ஏற்றுக் கொள்வதாக இல்லை அவரைப் பொறுத்தவரையில் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை விட வியூகம் வகுத்துக் கொடுக்க வேறு நபர்கள் தேவையில்லை .
ஆதவ் அர்ஜுனாவின் உண்மை முகம் தெரிந்த பிறகும் அவரைப் போன்றவர்களை விஜய் வைத்துக் கொண்டால் அரசியல் மட்டுமல்ல சினிமா துறையிலும் அவருக்கு எதிர்காலம் என்பது எட்டாக்கனியாகிவிடும் . கூடிய விரைவிலேயே இந்த ஆதவ் அர்ஜுனா யார் என்பது வெளி உலகத்துக்கு தெரிந்து விடும். இவ்வாறு அவர் பேசி இருக்கிறார் .
ஆதவ் அர்ஜூனா குறித்து சார்லஸ் மாட்டின் பேசியிருக்கும் இந்த கருத்து அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements


