விஜய் அரசின் மீது திமுக தாக்கு! “பழனி மொட்டை” சர்ச்சை என்ன?

Advertisements

முருகா, குமரா, செல்வா, கந்தா, காங்கேயா என்று சிவனிடமே தங்களை விட சிறந்தவன் தான் என்று போட்டி போட்டு வெற்றி கண்டு, ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான முருகனுக்கே தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மொட்டை போட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட முயன்றுகொண்டிருக்கிறார். அவர் மொட்டை போட்ட கதையை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.

கோடான கோடி மக்கள் தன் சுயலாபத்திற்காக கந்தனிடம் முறையிட்டு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பழனியிலே ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய சதி நடந்துள்ளதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பூட்டுகளின் தலைநகரம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த நில மோசடி விவகாரம் தொடர்பாக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முருகன் சன்னதியிலே அரங்கேறி வருவதாக குப்பாடு போட்டு கதறியிருக்கிறார். அதாவது, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, கோயில் கட்டுப்பாட்டில் கார் பார்க்கிங் செய்து கொண்டிருந்த நிலத்தை, தனியார் இருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. இந்த பரிவர்த்தனையை பார்க்கையில் பினாமி பரிவர்த்தனை ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையில் ஏற்பட்டுள்ளது.

இந்த புள்ளியில் அரசு சார்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதோடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சொல்லும்போது, அறியாமையின் காரணமாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக கூறுகிறார்.

விசாரணை துவங்குவதற்கு முன்பாக துறையின் அமைச்சர் அறியாமையின் காரணமாக செய்து விட்டார் என்று அவரே முன்வந்து சொல்வது குற்றவாளியை காப்பாற்ற அமைச்சர் துணை போகிறார் என்பது இதன் மூலமாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நாங்கள் விசாரித்து உண்மையை தெரிவிக்கிறோம் என்று சொல்வது தான் அமைச்சருடைய கடமை.

இதன் மூலம் குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள் என்பது தான் திமுகவுடைய குற்றச்சாட்டு என பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 6ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பவர் விடுமுறையில் சென்று விட்டார். இன்சார்ஜாக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுக்கப்படுகிறது. அருகில் உள்ள அலுவலகம் எல்லாத்தையும் விட்டுவிட்டு, 70 கிமீ தூரமுள்ளவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்றால் ஆளை செட் பண்றாங்க இந்த அரசாங்கம்.

அதுவும் கொடைக்கானல் சப்-ரிஜிஸ்டர் பத்திரங்களை பதிவு செய்பவர்கள் கிடையாது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவரை அழைத்துட்டு வந்து ஒருநாள் இன்சார்ஜாக போடுகிறார்கள். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று பதிவேட்டில் இருக்கும்போது, ரிஜிஸ்டர் செய்ய சொல்லும்போது இன்சார்ஜ் விசாரித்து இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பதிவு செய்துள்ளார்கள் என்றால் இதில் ஒரு சதி உள்ளது.

பினாமி பரிவர்த்தனை உள்ளது என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பரந்தாமன் முன்வைத்துள்ளார். அதோடு இவற்றை கிரையம் செய்து இருப்பதாக சொல்லக்கூடிய இரண்டு நபர்கள் யாரென்று போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படவில்லை. மேலும், திமுக ஆட்சியில் இந்த நிலம் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டது. பழனிக்கு மொட்டை போடுவார்கள் என்று தான் இதுவரை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி. இன்றைக்கு நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்த சதி செயலில் யார் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பரந்தாமன் கேள்விகளை அடுக்கியுள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருப்பது தற்போது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் சிந்திக்க வேண்டியது என்கிறார்.

ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ, மாறுவது மனம், சேருவது இனம், எதுவும் தெரியாத முருகனா நீ, ஏறுமயில் ஏறு, ஈசனிடம் நாடு, இன்முகம் காட்டவா நீ, நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பழனி ஆண்டவா ஓடி வா நீ, ஓடி வா நீ, இந்த சதி வலை   போட்டியிருக்கும் கைப்புள்ள விரைவில்  சிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *