
புதுச்சேரியை தான் சிங்கப்பூராக மாற்றுவேன், ஊழலை ஒழிப்பேன் என சொன்ன சார்லஸ் மார்ட்டின் அமித்ஷா அழைத்து மிரட்டியதால் தற்போது ரங்கசாமி காலில் விழுந்துள்ளார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், கம்பன் கலையரங்கில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசிய போது, புதுச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி பாஜகவின் பி-டீம் என்றும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் அவரது தந்தை மார்ட்டினைனை அமித்ஷா டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளார் என்றும் கூறினார்.
மேலும், புதுச்சேரியை தான் சிங்கப்பூராக மாற்றுவேன், ஊழலை ஒழிப்பேன் என சொன்ன ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அமித்ஷா அழைத்து மிரட்டியதால் தற்போது ரங்கசாமி காலில் விழுந்துள்ளார் என்று விமர்சித்தார்.





