லீமா ரோஸின் ரகசிய சந்திப்பு! செங்கோட்டையன் திட்டம் என்ன?

Advertisements
ஒரு கட்சியை அழிப்பதற்கும், ஒரு கட்சியில் கொள்ளையடிப்பதற்கும் சதித்திட்டம் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கும் லீமா ரோஸ் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தை பலரும் விமர்சித்து கொண்டிருக்கையில், லீமா ரோஸ் எதிரி கட்சியை எட்டிப்பார்த்து தம் கட்சியின் ரகசியங்களைப் போட்டு உடைக்கும் ரகசிய தகவலை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.

அம்மா, மகன், மருமகன் மூன்று பேரும் வெவ்வேறு கட்சியில் இருந்து கொண்டு நாட்டைச் சுரண்டப் போடும் திட்டம். தமிழகம் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. அம்மா லீமா ரோஸ் மார்ட்டின் 2026 பிப்ரவரி 17 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். இங்குதான் அதிமுகவில் அண்ணன் எடப்பாடி மீது கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் வெடிக்கத் தொடங்கியது.

ஊரையே அடித்து உலையில் போட்டுக்கொண்டார் லீமா ரோஸ். லாட்டரி மூலம் மக்களின் பணத்தை கொள்ளையடித்து, கொள்ளையடித்ததைப் பத்திரமாக பாதுகாப்பதற்கு அதிமுகவில் இணைந்து, தனக்கு திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் 60 ஆயிரத்து 795 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் தன்னை ஒரு அங்கமாக நிலைநிறுத்திக் கொண்டார். இருப்பினும் லாட்டரி மன்னன் ஆதவ் அவர்கள் பல கட்சிகள் மாறி இறுதியாக தவெகவில் வந்து தஞ்சம் அடைந்தார். விஜய் அவர்களின் மவுசைப் பயன்படுத்திக்கொண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை வீழ்த்தி 17 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் 66 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஒரு வழியாக தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சி அமைந்து, பல எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தள்ளாடிக் கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆண் குழந்தை பிறந்தால் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு எரியுமா ஒரு எரிச்சல்? அப்படி தவெக, அதிமுகவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருக்கையில், லீமா ரோஸ் / கோபி மன்னன் செங்கோட்டையன் சந்திப்பு அதிமுக நிர்வாகிகளை எரிச்சலடையச் செய்திருக்கிறது.

இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பு. அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தடையை மீறி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரைச் சந்தித்த மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது.
இத்தகைய சூழலில், கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவரை அ.தி.மு.கவின் மகளிர் அணி இணைச் செயலாளரான லீமா ரோஸ் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது, உட்கட்சி ஒழுங்குமுறையின் தற்போதைய நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தச் சந்திப்பு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு குறித்து காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

கட்சியின் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட லீமா ரோஸை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கக்கூடிய துணிச்சலும் தைரியமும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தொண்டர்களாலேயே எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் கட்சியின் உள்ளே புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமை இதற்கு என்ன மாதிரியான விளக்கத்தையோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையையோ எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு புறம் கட்சி சரிவு, மறுபுறம் கட்சிக்குள் உள்குத்து, துரோகம் செய்யும் லீமா ரோஸ் போன்ற எண்ணற்றோர், இன்னொரு பக்கம் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே இடியாய் இறங்கிய இந்தச் சந்திப்பு. பாவம், தமிழகத்திற்கே படியளக்கின்ற பழனிசாமிக்கு பலரும் இப்படி மொட்டை அடித்தால், அவர் மட்டும் எத்தனை சுமைகளைத் தாங்கிப் பிடிப்பார் என்கிறார்கள் அவரது அன்பு உடன்பிறப்புத் தொண்டர்கள்.

ஆக, “எதிரியை மன்னித்து விடலாம்; துரோகியை மன்னிக்கக் கூடாது” என்ற வசனத்திற்கேற்ப, லீமா ரோஸ் என்ற துரோகியை அண்ணன் எடப்பாடி அவர்கள் கட்சியிலிருந்து தூக்கி எறிவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *