தமிழர்களின் மனசாட்சி பேரறிஞர் அண்ணா..!

Advertisements

பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி என்றும் ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57 ஆவது தினத்தையொட்டி பதிவிட்டுள்ளார்.

இதில், அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு தான் என்று கூறினார்.பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி என்றும் நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள் தான் என்றார்.

மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு,நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்த பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் இடமில்லை என்று தெரிவித்தார். ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *