சுவிஸ் ஓபன்: அதிரடி வெற்றி; காலிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட்.!

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், நார்வேயின் கேஸ்பர் ரூட், போர்ச்சுகலின் ஜெய்மி பரியா உடன் மோதினார்.

இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய நார்வேயின் கேஸ்பர் ரூட் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *