“படையப்பா” திரைப்படத்தின் மறு வெளியீட்டு டிரைலர் வெளியீடு..!

நடிகர் ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படத்தின் மறு வெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் “படையப்பா” படம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில், நடிகர்கள் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு வழிவகை செய்தது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று “படையப்பா” திரையிடப் படப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *