மீண்டும் தொடங்கிய அமெரிக்கா – ஈரான் போர்.. ஹார்முஸில் பதற்றம்..!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஈரானுடன் அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்த உடன்பாட்டை மீறிச் செவ்வாயன்று மூன்று எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக ஈரானில் உள்ள எண்பதுக்கு மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக ஈரான் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக பக்ரைனிலும், குவைத்திலும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாங்கள் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் அமைதி உடன்படிக்கை செய்ததால் எண்ணெய் விலை குறைந்திருந்தது. இந்நிலையில் இரு நாடுகளிடையே மீண்டும் போர் மூண்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *