Phone tapping: விசாரணைக்கு உத்தரவு!

Advertisements

ஒட்டு கேட்பு விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விஷி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ள செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட 10 தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் செய்தி அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் சசிதரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

அரசின் ஏற்பாட்டில் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விஷி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *