Instagram Addiction: வாலிபரை வீட்டுக்கு வரவழைத்ததால் நடந்த விபரீதம்!

Advertisements

குருசிலாப்பட்டு அருகே கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ! வீடியோவால் மயங்கிய வாலிபரை வீட்டுக்கு வரவழைத்ததால் நடந்த விபரீதம்!

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர்(20).

அவ்வபோது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார். இந்த நிலையில் பிரகதீஸ்வரர் ஒரு வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் காரணமாக கணவனுக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27 ஆம் தேதி இரவு 10மணி அளவில் நதியா பிரதீஸ்வரரை வரவழைத்து உள்ளார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ்வர் நதியாவை பார்த்து உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதனால் தாலி சரடு மட்டும் தங்கம் எனக் நதியா கூறியுள்ளார். அப்போது திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடு பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தங்கத் தாலி சரடை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *