சர்வதேச விளையாட்டுகளில் அதிகமான பரிசு தொகை :ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் தேவராஜ்..!

சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு தற்போது அதிகமான பரிசு தொகை கிடைக்கிறது என ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் தேவராஜ்  தெரிவித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் குத்துச்சண்டை பயிற்சி அரங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக குத்துச்சண்டை வீரரும் அர்ஜுனா விருது வென்ற தேவராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இளம் குத்து சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் குத்து சண்டை வீரர் தேவராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு அரசு மூன்று சதவீதம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி ஊக்குவிப்பதாக கூறினார். இதை தொடர்ந்து, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது அதிக அளவிலான பரிசு தொகைகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற பயிற்சி மையங்களை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *