Advertisements

தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சராக பதவி பீடத்தில் அமர்ந்து வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை நடத்தி வந்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது தனது வலது தரம் இடது கரம் என எல்லாவற்றையும் இழந்து தன்னந்தனி மனிதராக தள்ளப்பட்டு இருக்கிறார். கடைசியாக அவருடன் இருந்த பண்ருட்டின ராமச்சந்திரனும் ஓபிஎஸ்சை விட்டு விலகி விட்டார்
ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் அத்தியாயம் முடிவடைந்து விட்டது இனியும் அவரை நம்பி அரசியல் வாழ்க்கை நடத்த முடியாது என்று சாபமிட்ட நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு அரசியல் தலைவர்கள் தலையில் பேரிடி விழுந்து மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
ஒருவர் மருத்துவர் ராமதாஸ். இவரது மகன் அன்புமணியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து தற்பொழுது அந்த கட்சி அன்புமணி கைக்குச் சென்று விட்டது . இறுதி கட்டமாக நான்தான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி என் கையில் தான் இருக்கிறது என்று அறிவிப்பு வரும் வரை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் .
இதற்கிடையே கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது கூட்டணிக்கு வழியில்லாமல் திண்டாடி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி இடம் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில் கூட எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார் .
இதற்கிடையே , ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் , வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகரன் , குப கிருஷ்ணன் என அனைவரும் ஓ பன்னீர்செல்வத்தை கை கழுவி விட்டு கட்சி தாவி விட்டார்கள் . கடைசியாக மூத்த அரசியல் தலைவரும் ஓ பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆலோசகரமாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் புதிய கட்சியை தொடங்கிவிட்டார். எம்ஜிஆர் அண்ணா திமுக என தனதுபுதிய கட்சிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பெயர் சூட்டியிருக்கிறார்
இதனை தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் பேசும் பொழுது சமுதாயத்தில் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது . எங்களின் இந்த புதிய அரசியல் இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது. அதே சமயம் எங்கள் கொள்கை உடன் ஒத்துப் போனால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம். இது மக்களுக்கான இயக்கம் ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் அத்தியாயம் முடிந்து விட்டது .
அவருடன் பழகியதற்காக இன்னமும் காத்திருந்து வாழ்நாளை நான் வீணாக்க முடியாது என தெரிவித்திருக்கிறார் . இந்த நிலையில், தற்பொழுது ஓ பன்னீர்செல்வத்தை யாரும் கூட்டணி சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. கடைசி கட்டமாக தான் மட்டும் போட்டியிடும் வகையில் ஒரே ஒரு தொகுதியை வழங்கினால் போதும் என பாஜக மேல் இடத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசி வருகிறார் , அதேசமயம் அரசியலில் அனாதையாகி விட்ட சூழ்நிலையில் திமுகவுடன் சேரலாமா என்றும் அவர் ஆலோசனை செய்து வருகிறார் ,
இருந்தபோதிலும் அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியை பெறுவார் என்பது கடைசி தகவலாக தெரியப்படுகிறது , ,
Advertisements




