
சென்ற வாரத்தில் குறைவாக இருந்த காய்கறி கூடப் புதிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தை மாதம் என்பது சுப தினங்கள் அதிகம் வருகின்ற மாதமாக விளங்குகிறது.
தொடர்ந்து முகூர்த்த நாட்கள் போன்றவையாலும் தைப்பூசம் வரை அசைவ உணவுகள் பெரும்பாலும் தவிர்க்கப்படும் என்பதாலும், அதனைத் தொடர்ந்து வானிலை தொடர்ந்து பனி மற்றும் வெயில் சற்று அதிகமாகவே இருப்பதால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்ற வாரத்தில் குறைவாக இருந்த காய்கறி கூடப் புதிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தைப் பொறுத்தவரையில் தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய், பெரிய வெங்காயம் 35 ரூபாய், பச்சை மிளகாய் 45 ரூபாய், உருளைக்கிழங்கு 35 ரூபாய், பூசணிக்காய் 20 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய், முட்டைக்கோஸ் 25 ரூபாய், கேரட் 50 ரூபாய், காலிஃபிளவர் 30 ரூபாய், கத்தரிக்காய் ₹40 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், பூண்டு 300 முதல் 400 ரூபாய், இஞ்சி 70 முதல் 100 ரூபாய், முருங்கைக்காய் 150 முதல் 200 ரூபாயென விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை சென்ற வாரத்தைப் போல அதிகமாகவே உள்ளது.
மேலும் தொடர்ந்து சுப தினங்கள், முகூர்த்த நாட்கள் போன்றவையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும், மேலும் இன்னும் சில வாரங்களுக்கு இதே போல் காய்கறிகள் விலை இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வால் அன்றாடம் சமைக்கும் பெண்கள் கலங்கி தான் போயுள்ளனர்.
