திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது – மாணிக்கம் தாகூா்.!

Advertisements

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சிக்குரியது என்றும், திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு நீண்ட காலமானது என்றும் தெரிவித்தார்.
எனவே, தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்தார். பின்னர் வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்பதால் மூன்றாவது இடத்தையே பெறும் என்று கூறினார்.
தொடர்ந்து, தோல்வி பயம் காரணமாக பாஜக நிர்வாகிகள் சிலா் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்க்கலாம் என்றும், நயினாா் நாகேந்திரன் தனது தொகுதியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *