ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரிங்க இருந்தா?

சென்னையில் “ஊருக்கு ரெண்டு ஊதாரி” என்ற படத்தின் பூஜை  நடைபெற்றது.

நடிகர்கள் பிரஜின், புகழ் ஆகியோர் நடிக்கும் “ஊருக்கு ரெண்டு ஊதாரி” என்ற படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் ஜனனி,விக்ரம் விஜய், ரவி மரியா, அபிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்பட பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குனர் யோகேஷ்வரன் பேசியபோது,  படம் முழவதும் நகைச்சுவை படமாக உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். ஓரே வீட்டில் இரண்டு ஊதாரிகள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்ய மான நகைச்சுவைப் படமாக எடுக்கவிருப்பதாகக் கூறினார். நகைச்சுவை படமாக உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *