திமுகவும் அராஜகத்திற்குத் துணை போகிறது..!

Advertisements

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் என்றும், இதுபோன்ற அராஜகச் செயல்களுக்கு திமுகவும் துணை போகின்றது என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில், உரிய ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில், யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *