K. S. Raj Gounder: வரும் தேர்தலில் பாஜக, அதிமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் குறிக்கோள்!

Advertisements

பாஜக அரசையும், அதிமுக வையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் குறிக்கோள் எனவும், எங்களுக்கு எதிர் கட்சி என்பது தற்போது இருக்கும் அதிமுக அல்ல. அது ஓ பி எஸ் பக்கமோ, சசிகலா பக்கமோ, டிடி வி பக்கமோ சேர்ந்தால் எதிர் கட்சியாக இருக்கலாமெனப் புதிய திராவிட கழக நிறுவனர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே புதிய திராவிட கழகத்தின் சார்பில் கொங்கு நாட்டின் 5வது சமூக நீதி  மாநில மாநாடு அக்கட்சியின் நிறுவனர் கே.எஸ். ராஜ்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் வீட்டு வசதி துறை அமைச்சர் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தைத் துவக்கி வைத்தார்.மாநாட்டினை வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த  தலைவர்கள் மேடையில் ஒவ்வொருவராகச் சிறப்புரையாற்றினர்.

பின்னர் புதிய திராவிட கழக  நிறுவனர் கே.எஸ் ராஜ்கவுண்டர் பேசுகையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதவி கொடுத்துத் தமிழக முதல்வர் அழகு பார்த்தார் எனவும், எங்களுக்கு எதிர் கட்சி என்பது தற்போது இருக்கும் அதிமுக அல்ல.

அது ஓ பி எஸ் பக்கமோ, சசிகலா பக்கமோ, டிடி வி பக்கமோ சேர்ந்தால் எதிர் கட்சியாக இருக்கலாம் எனவும், பாஜக அரசையும், அதிமுக வையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் குறிக்கோள் எனவும்,40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற பாடுபடுவோம் எனவும், இது வெறும் மாநாடு என நினைத்தோம் ஆனால் மாபெரும் வெற்றி மாநாடக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.

மேலும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலையை ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மாமன்னர் வல்வில் ஓரிக்கு  மணிமண்டபம் மூன்று கோடி மதிப்பீட்டில் அமைத்துத் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம் எனவும், கொடிவேரி அணையைக் கட்டிய கொங்காள்வானுக்கு. வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்துத் தர வேண்டும் என 24 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.இந்த மாநாட்டில் பல்வேறு சமுதாய அமைப்பினர். புதிய திராவிட கழக நிர்வாகிகள்

உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டின் முடிவில் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேஷ் நன்றி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *