Online gambling: ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

Advertisements

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதால், மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் மாகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் அமலாகக்துறை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த ரன்பீர் கபூர் பணம் பெற்றதுடன், ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 6ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பிரபல பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர்கள் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *