Swayam Siddha: சர்ச்சையில் சிக்கினார்

Advertisements

எனக்கு என்டே கிடையாது’ என்ற படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சுவயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாகச் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பிரபல இளம் நடிகை சுவயம் சித்தா. இவர் ‘எனக்கு என்டே கிடையாது’ என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ரமேஷ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளார். கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சுவயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாகச் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


இதுகுறித்து டைரக்டர் விக்ரம் ரமேஷ் கூறும்போது, “படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தோம்.

ஆனால் சுவயம் சித்தா வரவில்லை. இந்தியன்-2 உள்ளிட்ட இதர பட வேலைகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இனிமேல் பெரிய படங்களில்தான் அவர் நடிப்பார் போலும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியான சுவயம் சித்தா குற்றச்சாட்டுக்கு விரைவில் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *