தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யும் திருமா?

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய நிலையில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

“தமிழக மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.இந்தச் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல், வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடுகிறேன்” எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒருவரை நிற்க வைப்பதாகவும் தற்போது திருமாவளவன் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவனிடம் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் இதுகுறித்து திருமாவளவன் பேசவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *