
கரூர் விவகாரதில், சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன் என்று, சென்னை-தியாகராயர் நகரில். ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையை மீட்ட சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 30-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ம.பொ.சிவஞானத்தின் திருஉருவச் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த, ம.பொ.சி.யின் திருவுருவச் சிலைக்கு, மா.பொ.சி.செந்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன், சத்ரிய சான்றோர் படை கட்சியின் தலைவர் ஹரிநாடார், இந்திய நாடார்கள் பேரவை தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மொழிவாரி மாகாணங்கள் பிரித்த போது, திருத்தணியை ஆந்திராவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியபோது, எக்காரணத்தை கொண்டும், ஆந்திராவிற்கு திருத்தணியை கொடுக்க மாட்டோம் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தவர் மா.பொ.சிவஞானம் என்றும், சென்னையை ஆந்திராவிடம் கொடுக்க முற்பட்டபோது, தலை கொடுத்தாலும் தலைநரை காப்போம் என்று சென்னையை தமிழ்நாட்டோடு இருக்க செய்தவர். சிலப்பதிகாரத்திற்கு மாநாடு நடத்தியவர் அய்யா மா. பொ.சிவஞானம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்



