ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப்

Advertisements
அனைவரும் உடனடியாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் , நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்றும், எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றார்.
மேலும், அனைவரும் ஈரான் தலைநகர் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்” என்று அதில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நேற்று தீவிர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அங்கே தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எச்சரிக்கைகளை ஆதரித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், டெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *