
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் வங்கதேசத்தை நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின.
இதில், நியூசிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், சோபி டெவைன் 63 ரன்னும், புரூக் ஹாலிடே 69 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கிய நிலையில், 40 ஓவர்களில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.



