BJP MASTER PLAN : NDA கூட்டணியில் த வெ க இணையுமா? அமித்ஷா சொன்ன பதில்

Advertisements
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களில் உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக தனது தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமையில் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா இது நிர்பந்தத்தினால் உண்டாக்கப்பட்ட கூட்டணி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் செயல்படும். மக்கள் விரோத சமூக விரோத தமிழ்நாட்டின் விரோத  திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில்  பெரும்பாலான அரசியல் கட்சியில் ஓர் அணியில் இருந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 மேலும் அதிமுக  உட்கட்சி கட்சி தொடர்பான பிரச்சனைகளில் பாஜக ஒருபோதும் தலையிடாது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்  தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டி இடுகிறோம் அக்கட்சியில் இருந்து தான் முதலமைச்சர் வருவார் என பதில் அளித்திருந்தார்.
மேலும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியின் பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் அமித்ஷா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு அதிமுக கட்சியில் இருந்து இதுவரை பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க நான் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
அதிமுக கட்சியில் நடக்கும் விவகாரங்களுக்கு அவர்கள் தான் தீர்வு காண வேண்டும், முடிவுகள் எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மேலும் வரும் 2026 காண சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *