இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள மவுலவி அமீர்கான்.!

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மவுலவி அமீர்கான் முத்தக்கி உத்தரப் பிரதேசத்தின் சகாரண்பூர் மாவட்டத்தில் உள்ள தாருல் உலூம் தியோபாண்ட் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

பல்கலைக்கழகத்தின் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்க வளாகத்தைப் பார்வையிட்ட பின் ஆப்கன் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பல்கலைக்கழக நிர்வாகம், பொதுமக்கள் ஆகியோரின் வரவேற்பு தன்னை நெகிழச் செய்ததாகத் தெரிவித்தார். வருங்காலத்தில் இந்திய – ஆப்கானிஸ்தான் உறவுகள் மிகவும் சிறப்பாக வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *