
அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அர்ப்பணிப்பதாக பரிசு வென்ற வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடிய மரியா கொரினா மச்சாடோ வுக்கு,இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்தது.
இந்நிலையில், நோபல் பரிசு வென்ற மரியா மச்சாடோ தனது பரிசை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ அனைத்து வெனிசுவேலா மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரம், சுதந்திரத்தை வெல்வது என்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஊக்கமாகும்.நாம் இன்று வெற்றியின் வாயிலில் இருக்கிறோம்.
இன்று, எப்போதையும் விட அதிகமாக, சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக குடியரசு நாடுகளை எங்களின் முக்கிய கூட்டாளிகளாக கருதுகிறோம்.
இந்தப் பரிசை வெனிசுவேலாவில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கும், எங்களின் போராட்டத்திற்க்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



