எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது..!

மின்சாரக் கார்கள், இருசக்கர வாகனங்களின் விலைகள் ஐசிஇ இஞ்சின் வாகனங்களின் விலைக்குச் சமமாக வந்துவிடும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அடுத்த ஆறு மாதங்களில் மின்சாரக் கார்கள், இருசக்கர வாகனங்களின் விலைகள் பெட்ரோல், டீசல் இஞ்சின் வாகனங்களுக்குச் சமமாய் வந்துவிடும் என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் அவற்றின் பராமரிப்புச் செலவு ஐசிஇ இஞ்சின் வாகனங்களைவிட ஐந்தில் ஒருபங்கே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களைப் பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *