Nigeria : மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலி

Advertisements

நைஜீரியாவில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நகரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தப் போது, துப்பாக்கிகளுடன் மசூதிக்குள் நுழைந்த

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகி உள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகப் பெனு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், வீடுகளில் தீவைத்ததிலும் 150 க்கும் மேற்பட்டோர் பலியாகிவுள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *