டிரம்ப், ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை..!

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்த விரைவில் அதிபர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் விரைவில் ரஷ்யா, உக்ரைன் அதிபர் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

இதில், மூன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்தபோரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அதிபர் ஜெலன்ஸ்கிடனான சந்திப்பை அடுத்து அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில், அவரிடம் ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் பிரதிநிதிகள் இடையேயான நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் ஆதரவு தெரிவித்ததாக புடின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதனால், டிரம்ப்-புடின்-ஜெலன்ஸ்கி ஆகியோரின் முத்தரப்பு பேச்சுவார்த்தை உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *