காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

மேட்டூர் அணை 5 ஆவது முறையாக நிரம்பியதில் 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியேப் பெய்ய தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகக் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பிய நிலையில், அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது.

தொடர்ந்து ஒகேனக்கல் காவேரி நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 5 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரைக் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில், விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *