மக்கள் வளர்ச்சியை நோக்கி உறுதியுடன் செயல்படுகின்றனர் – நரேந்திரமோடி பெருமிதம்

Advertisements

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், மக்கள் உறுதியுடன் செயல்படுகின்றனர்  என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில், பணிவு, மன்னிப்பு, மற்றும் உன்னத நடத்தை ஆகியவையே, ஆளுமையின் உண்மையான அணிகலன்கள் என்றும், இந்த குணங்களுடன், நாட்டு மக்கள் இன்று வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக ஈடுபட்டுள்ளனர் என்றும், பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மேலும். வியட்நாமின், டா-நாங்கில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்டோர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் நமது ஆண்கள் பிரீஸ்டைல் மற்றும் பெண்கள் மல்யுத்த அணிகள் குழு பட்டங்களை வென்றுள்ளன என்றும், ஆண்கள் பிரீஸ்டைல் மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று, ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில், இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்றும், பெண்கள் மல்யுத்த அணி 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது எனவும், கிரேக்கோ-ரோமன் அணியும் 8 பதக்கங்களுடன் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையைப பதிவு செய்துள்ளது என்றும், நமது மல்யுத்த வீரர்களுக்கு வாழ்த்துகள் என்றும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *