NIA: பயங்கரவாத முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!

NIA

ஐஎஸ் தலைவர் சையது நபில் நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்…

சென்னை: திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரைச் சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபியிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறித் தலைமறைவாக இருந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *