Nanguneri: மீண்டும் பரபரப்பு!

நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளி சுவற்றில் ஜாதிய வன்மத்தோடு அவதூறான வாசகங்களை எழுதிய 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்…

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள பள்ளிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள சங்கரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் ஜாதிய வன்மத்தோடு வகுப்பறை சுவற்றில் சில வாசகங்களை எழுதி வைத்ததாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மற்றும் போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தி அவதூறாக எழுதப்பட்ட வாசகங்களை அழித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களைக் கைது செய்து திருநெல்வேலியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *