நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!

Advertisements

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. இதில், நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் சிராஜ்,ரானா,பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோலி 93 ரன்கள் சேர்த்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28 ஆயிரம் ரன்களை அதிவேகமாக பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதைத் தொடர்ந்து,கடைசி வரை நின்று விளையாடிய கே.எல்.ராகுல் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *